” ஆடுகளும் ஓநாய்களும்” கவிதை நூல் திருகோணமலையில்  வெளியீட்டு விழா.

(அ . அச்சுதன்)  திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலக கேட்போர் கூடத்தில் நீங்களும் எமுதலாம் எஸ்.ஆர்.தனபாலசிங்கத்தின்
“ஆடுகளும் ஓநாய்களும்” கவிதை நூல்
வெளியீட்டு விழா  கவிஞர் க . யோகானந்தன்  தலைமையில் 09 -12-2023 சனிக்கிழமை காலை 10. 00  மணிக்கு
நடைபெற்றது.
முதன்மை அழைப்பாளர்களாக சாகித்ய
ரத்னா மு.சிவலிங்கம் அவர்களும், தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசிரியர் ஏ.எப்.எம்
அஷ்ரஃப் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்
சிறப்பு விருந்தினராக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை.நவம்
அவர்களும், ஓய்வுபெற்ற உப-பீடாதிபதி
ந.பார்த்தீபன் அவர்களும் கலந்து கொண்டு
சிறப்பிக்க,நீதிமன்றப் பதிவாளர் எம்.எஸ்.எம் நியாஸ் அவர்களும் ஓய்வுபெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர்
ஒ.குலேந்திரன் அவர்களும் “ஓசை”
சஞ்சிகை ஆசிரியர் மூதூர்.முகைதீன்
அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
வரவேற்புரையை ஊடகவியலாளர் அ.அச்சுதன் நிகழ்த்த நூல் அறிமுக உரையினை திருமதி.செள.சந்திரகலா
வழங்கி வைத்தார்.
முதல் பிரதியை மூத்த எழுத்தாளர் சூசைஎட்வேட்
அவர்கள்  நூல் ஆசிரியரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.நூலின்
நயவுரையை கவிஞர்.லலிதகோபன்
வழங்கினார்.
விமர்சன உரையினை முதன்மை விருந்தினர் பேராசிரியர்.ஏ.எப்.எம் அஷ்ரஃப்
வழங்கினார்.நாடறிந்த எழுத்தாளர் சாகித்ய
ரத்னா.மு.சிவலிங்கம் அவர்கள் முதன்மை
அழைப்பாளர் உரையை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்.ந.பார்த்தீபன் அவர்கள் சிறப்பு விருந்தினர் உரை
வழங்க, ஏற்புரையை நூலாசிரியர் எஸ்.ஆர்
தனபாலசிங்கம் வழங்கினார்.நிகழ்ச்சித்
தொகுப்பினை அதிபர் திருமதி.சுஜந்தினி
வழங்கினார்.
எழுத்தாளர்கள்  மற்றும் இலக்கிய ஆர்வலர்கள்
ஏராளமானோர்  நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

20231210_203805.jpg20231210_203753.jpg20231210_203738.jpg20231210_203658.jpg20231210_203630.jpg20231210_203617.jpg20231210_203600.jpg20231210_203533.jpg20231210_203547.jpg20231210_203438.jpg20231210_203645.jpg20231210_203710.jpg