(வாஸ் கூஞ்ஞ)
கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) மலேசியா நாட்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச ரீதியிலான மனக் கணிதப் போட்டியில் மன்னாரிலிருந்து கலந்து கொண்ட செல்வி ரியானா என்பவர் மூன்றாவது இடத்தை தனதாக்கிக் கொண்டார்.
இப்போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்தும் இரண்டாயிரம் மாணவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மன்னார் யோசவ்வாஸ் நகரைச் சேர்ந்த திரு திருமதி இராஜநாயகம் பெமிலா செறின் ஆகியோரின் புத்திரியாவார்.
யுசிஎம்எஸ் என்ற நிறுவனத்தால் இலங்கையிலிருந்து 62 மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதில் மன்னார் தோட்டவெளிப் பாடசாலையில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியான செல்வி ரியானாவே மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது