பேய் விரட்டும் பௌத்த ஆலையத்தின் பூசாரி இருவர் மீது மேற் கொண்ட  தாக்குதலில் ஆண் ஒருவர் உயிரிழப்பு.

(கனகராசா சரவணன்)   மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பிரதேசத்தில் பேய் பிசாசு ஆவிகளை விரட்டியடிக்கும் பௌத்த பத்தினி தெய்வ வழிபாட்டு ஆலையத்தில் நோய்யை குணப்படுத்து சென்ற சகோதரனும் சகோதரியுமான இருவர் மீது  ஆலைய பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் ஆண் உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை (6) இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஓடியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு புனானை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அனுரா ஜெயலத் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அவரது சகோதரியான 61 வயதுடைய சுமிதா ஜரங்கனி என்பவரே படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு காலில் மின்சார தாக்குதலால் ஏற்பட்ட நோயை குணப்படுத்து வதற்காக பேய் பிசாசு ஆவிகளை விரட்டியடிக்கும் மாங்கேணி பிரதேசத்தில் பௌத்த பத்தினி தெய்வ வழிபாட்டு ஆலையத்துக்கு அடிக்கடி சென்று நோயை குணப்படுத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில்  சம்பவதினமான புதன்கிழமை(6) ம் திகதி அவரும் அவரது காரில் சகோதரியும் சென்ற நிலையில் சிங்கள பூசகரின் மனைவியுடன் உயிரிழந்தவருக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பினையடுத்து பூசகர் மனைவியை கத்தியால் தாக்க முற்றபட்ட நிலையில் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ள நிலையில் மனைவியுடன் தொடர்புபட்டவர் மீது அவரது சகோதரி மீதும் காரின் மீதும் மேற்கொண்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததுடன் சகோதரி படுகாயமடைந்துள்ளதுடன் காரையும் அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து  பூசாரி தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து நேற்று வியாழக்கிழமை பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிசார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.