கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி  கடேட் படை மாணவர்களுக்கு பாராட்டும் கெளரவமும்.

(அஸ்ஹர் இப்றாஹிம்)   கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் கடேட்ஸ படை மாணவர்கள், தேசிய மாணவ சிப்பாய்கள் படையணி ரன்தம்பே  பயிற்சி நிலையத்தில் கணிப்பீட்டு முகாமில் பங்கு பற்றியமைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் மேஜர். கே. ம். தமீம் அவர்களின் வழிகாட்டலிலும் தலைமையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹானி நிறுவனத்தின் பணிப்பாளர், பொறியியலாளர் ஏ.எம். சித்தீக் பரீட் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக  பாடசாலையின் அதிபர் எம். ஐ. ஜாபிர் அவர்களும் விசேட அதிதிகளாக கல்லூரியின் பிரதி அதிபர் எ.எச்.எம். அமீன், எ.எல்.எம். தன்ஸீல், கல்லூரியின் அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் டாக்டர். எம்.எச்.. ஷனூஸ் காரியப்பர் , 17 வது படைப்பிரிவின் பயிற்சி அதிகாரி கேப்டன். எம்.டி.நௌஷாத்,  38வது படைப்பிரிவின் அதிகாரி இரண்டாவது லெப்டினன்  எம். எம். எம். ஹாசிக், பாடசாலையின் விளையாட்டு பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம். அமீர், ஒழுக்காற்று சபையின் பொறுப்பாசிரியர் யு.எல்.எம். இப்ராஹிம், பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் யூ.எல்.எம்.ஹிலால், பாடசாலையின் முன்னாள் கடேட் மாணவ சங்கத்தின் தலைவர் எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம்  அதன் பிரதிநிதிகள்,  பகுதித் தலைவர்கள், பெற்றார்கள் என பலர்  கலந்து கொண்டனர்.