இறக்காமத்தின் முதல் பட்டதாரி அதிபர் சுபைதீனுக்கு கோலாகலமான சேவைநலன் பாராட்டு விழா.

( வி.ரி. சகாதேவராஜா)  இறக்காமத்தின் முதல் பட்டதாரி அதிபர் பி.ரி. சுபைதீன்  ஓய்வு பெற்றதையடுத்து நேற்று சேவைநலன் பாராட்டு விழா ஊர்வலத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
இறக்காமம் வரிப்பத்தான்சேனை மஜீட்புர அஸ்ஸபா வித்தியாலய அதிபர் பி.ரி.சுபைதீன் 2023.12.05 முதல் 60 வயதுப் பூர்த்தியை முன்னிட்டு ஒய்வு பெற்றுச் செல்வதனால் அவரது சேவை நலன் பாராட்டு விழா , அதிபர் ஆர்.எம்.சியாத்  தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்குப்  பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப்  பணிப்பாளர் டாக்டர்.உமர் மௌலானா   கலந்து சிறப்பித்தார்.
மேலும் கல்வி மற்றஅதிகாரிகள், கோட்ட அதிபர்கள்,பள்ளிவாசல் தலைவர்கள், ஊர் பிரமுகர்கள்,பெற்றோர்கள், SDEC உறுப்பினர்கள் மற்றும் மாணவச் செல்வங்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிறைவில் வாகன ஊர்தி ஊர்வலம் இடம்பெற்றது.