அம்பாறை ஹாடியில் ஒன்றிணைந்த மூவின மாணவர்கள்.

 (அஸ்ஹர் இப்றாஹிம்)     இலங்கையின் நாலா புறங்களிலுமிருந்து இனத்தால்,மொழியால் வேறுபட்ட மூவின மாணவர்களும் இலங்கையர்கள் என்ற ஒரே குடையின் கீழ் அன்பு,வசந்தம்,நன்றியுணர்வு போன்ற உணர்வுகளுடன் அம்பாறை ஹாடி  உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம்  ( Tourism & hospitality Management) கற்கை நெறியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இம்மாணவர்கள் 2023 ஆம் ஆண்டு நிறைவடையும் இச் சந்தர்ப்பத்தில் “even  TO 23” எனும் களியாட்ட ஒன்றுகூடல் நிகழ்வொன்றினை ஹாடி உயர் தொழில்நுட்ப நிறுவன கேட்போர் கூடத்தில் ஒழுங்கு  செய்திருந்தனர் . இந்நிகழ்வில் நிறுவன நிர்வாகிகள்,விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.