(அ . அச்சுதன்) தேசிய வாசிப்பு மாதம் ”உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது’ எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் செயலாளர் திருமதி.ந.யாழினி அவர்களின் தலைமையின் கீழ் உப்புவெளி, சாம்பல்தீவு, வெள்ளைமணல், சீனக்குடா ஆகிய பொதுநூலகங்களால் வாசகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் பல்வேறு நிகழ்வுகள்; முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
அதனடிப்படையில் (01.12.2023) தரம் 05 மாணவர்களுக்கான இசையும் அசைவும் போட்டியும், தரம் 09 மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியும், உப்புவெளி பொதுநூலகத்தினால் நடாத்தப்பட்டது. நிகழ்வினை நூலகர் க.வரதகுமார் மற்றும் நூலக உதவியாளர்கள் திருமதி.சி.பிரபாலினி, திருமதி.க.கார்த்திகா, திரு.இர்பான் உசைத் ஆகியோரும் ஒழுங்கமைத்திருந்தனர்.
நடுவர்களாக திருமதி.திருச்சிலோகானந்தா நிரந்தராதேவி (ஓய்வுநிலை ஆசிரியை), அரசரெத்தினம் அச்சுதன் (கவிஞர், ஊடகவியலாளர்), செல்வி.இலங்கேஸ்வரன் கீர்த்தனா (சங்கீத ஆசிரியை) ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான கருத்துரைகளும் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.