செலவைக் குறைக்கும் முயற்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,

செலவைக் குறைக்கும் முயற்சியில், புதிதாக நியமிக்கப்பட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, விளையாட்டு இராஜாங்க அமைச்சை உலக வர்த்தக மையத்தில் இருந்து கொழும்பு – 07 இல் உள்ள விளையாட்டு அமைச்சின் கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்துள்ளார்.

உலக வர்த்தக மையத்தில் உள்ள  இராஜாங்கஅமைச்சரின் அலுவலகத்தை பராமரிக்க 4.2 மில்லியன் ரூபாய்கள் கணிசமான மாதாந்த செலவினத்தை அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.

இராஜாங்க அமைச்சர் விளையாட்டு அமைச்சின் காரியாலயத்தில் இருந்து கடமைகளை திறம்பட மேற்கொள்ள முடியும் என அமைச்சர் பெர்னாண்டோ, தற்போதுள்ள உட்கட்டமைப்பை மேம்படுத்துவதன் நடைமுறைத்தன்மையை வலியுறுத்தினார்.

ஹரீன் பெர்னாண்டோ சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருப்பதால், தனது அலுவலகம் சுற்றுலாத்துறை அமைச்சில் அமையும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, விளையாட்டுத்துறை இராஜாங்கஅமைச்சருக்கு கொழும்பு -07 இல் உள்ள விளையாட்டு அமைச்சின் வளாகத்தில் இருந்து செயற்பட அனுமதியளித்துள்ளார்.

மேலும், இந்த இடமாற்றத்தின் மூலம் வருடாந்தம் சேமிக்கப்படும் சுமார் 50 மில்லியன் ரூபாவை விளையாட்டு மேம்பாட்டு நிதிக்கு ஒதுக்குமாறு அமைச்சர் பெர்னாண்டோ அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.