மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் விஜயம்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு தென் ஆபிரிக்க நாட்டிற்க்கான உயர்ஸ்தானிகர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு சுமார்  400 வருடங்கள் பழமைவாய்ந்த ஒல்லாந்தர் கோட்டையினை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது தென் ஆபிரிக்க நாட்டிற்கான உயர்ஸ்தானிகர் ( Sandile Edwin Schalk ) சாண்டிலே எட்வின் ஷால்க் அவர்களும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர் ஏ.பீ.மதனவாசன் மற்றும் உயர்ஸ்தானிகரின் செயலாளர்,  உள்ளிட்டோர் வருகை தந்திருந்ததுடன், உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை வளாகத்தை சுற்றிக்காட்டியிருந்ததுடன், மாவட்டத்தின் வளங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.