சாய்ந்தமருது நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பு.

(ஏ.எஸ்.மெளலானா)  கட்டார் நாட்டில் பணியாற்றும் சாய்ந்தமருதைச் சேர்ந்த பொறியியலாளர் எச்.எம். பர்ஸாத் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களின் நலன்கருதி சாய்ந்தமருது பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பு செய்துள்ளார்.
இவற்றை செவ்வாய்க்கிழமை (28) பிற்பகல் அவரது சார்பில் எம். சித்தி நிபாரா, கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.
இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸி, கணக்காளர் கே.எம்.றியாஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
தூரநோக்கு சிந்தனையுடன் மாணவர் நலன்கருதி மிகவும் பெறுமதியான நூல்களை அன்பளிப்புச் செய்தமைக்காக பொறியியலாளர் எச்.எம். பர்ஸாதிற்கு மாநகர சபை சார்பில் மிகுந்த நன்றியும் வாழ்த்தும் தெரிவிப்பதாகக் கூறிய ஆணையாளர்
பாராட்டுப் பத்திரம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.