தாய்லாந்து பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்கேற்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) சபாநாயகரின் அழைப்பின் பேரில் தாய்லாந்து பாராளுமன்றத்தில் இடம்பெற்ற Loy Krathong நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டுள்ளார்.
தாய்லாந்து பாராளுமன்றத்தின் சபாநாயகர் வன்முஹமத்னூர் மாதா  அழைப்பின் பேரில், பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற  2023 இற்கான Loy Krathong  திருவிழாவில் கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் பங்கேற்றார்.சபாநாயகர், செனட் தலைவர், இராஜதந்திரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு Loy Krathong வாழ்த்துக்களை செந்தில் தொண்டமான் தெரிவித்ததுடன், அந்நிகழ்வில் கலந்து  சிறப்பித்துள்ளார்.