மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலச்சம் கப்பம் கோரியவர் கைது.

(கனகராசா சரவணன்)  மட்டக்களப்பு வாழைச்சேனையில் உறவினரான மச்சானிடம் மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலச்சம் ரூபாவை கப்பமாக தரவேண்டும் எனக் கோரிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மச்சானை நேற்று திங்கட்கிழமை (27)  வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குறுவாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 2021 ம் ஆண்டு  அதிஸ்டலாபச் சீட்டின் மூலம் 10 கோடி ரூபா பணப்பரிசு கிடைத்துள்ளது.

இதனையடுத்து குறித நபரிடம் அவரின் மனைவிவளி உறவினரான மச்சான் முறையான நபர் தான்பாதுகாப்புக்கு இருப்பதாகவும் அதிஸ்டலாபச் சீட்டின் மூலம் கிடைத்த பணத்தில் தனக்கும் பணம் தருமாறு நீண்டகாலமாக அவருக்கு தொந்தருவு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) அதிஸ்டலாபச் சீட்டின் மூலம் பணம்கிடைத்த மச்சானிடம் குறித்த உறவினரான மச்சான் சென்று மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலச்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளதையடுத்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து கப்பம் கோரிய நபரை கைது செய்தனர்.

இதில் கைது கைது செய்யப்பட்ட 41 வயதுடையவரை நேற்று திங்கட்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.