பொலிஸ் கான்ஸ்டபிள் பொலிஸ் தடுப்பில் ஏனைய இருவரும் விளக்கமறியல்–
(கனகராசா சரவணன்;)
காத்தான்குடி பிரதேசத்தில் 120 கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யபட்ட பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் உட்பட 4 பேரில் 2 பேரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸ்கான்ஸ்டபிள் மற்றும் பிரதான போதைவியாபாரி பாயிஸ் ஆகிய இருவரையும் முதலாம் திகதிவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை (27) உத்தரவிட்டார்மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்;த ஞாயிற்றுக்கிழமை (26) ம்திகதி அதிகாலை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து பிரதான வியாபாரியான பாயிஸ் 72 கிராமுடனும் அவரது உதவியாளர் 13 கிராமுடனும் 25 கிராமுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிளையும் 10 கிராமுடன் கராச் ஒன்றின் முதலாளி உட்பட 4 பேரை 120 கிராம்; ஜஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய பொலிசார் பிரதான வியாபாரி மற்றும் பொலிஸ் கானஸ்டபில் ஆகிய இருவரையும் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி கேரியதையடுத்து இருவரையும் எதிர்வரும் முதலாம் திகதிவரை தடுப்பு காவலில் வைத்து விசாணை செய்ய அனுமதிவழங்கியதுடன் ஏனைய இருவரையும் எதிர்வரும் 11 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்