மட்டு தரைவில் மாவீரர் நினைவேந்தலை அலங்கரித்த கொடிகள் போன்றவற்றை வாகத்தில் ஏற்றி வந்த மாவீரர் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட 4 பேர் கைது

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு  தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடத்தினை அலங்கரித்த கொடிகள் கம்பங்கள் ஜெனரேற்றர். ஒலி பெருக்கியை என்பவற்றை கழற்றி வாகனத்தில் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு திரும்பிய மாவீரர் தின ஏற்பாட்டாளரும் முன்னாள் போராளியுமான நிதர்சன் உள்ளிட்ட நான்கு பேரை நேற்று திங்கட்கிழமை (27) இரவு வீதியில் வைத்து கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நினைவேந்தலை ஏற்பாடு செய்துவந்த ஏற்பாட்டாளரும் முன்னாள் போராளியுமான நிதர்சன் நேற்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் முடிவுற்றதும் அங்கு சோடனை செய்த கொடிகள் கம்பங்கள் ஜெனரேற்றர். ஒலி பெருக்கியை கழற்றிக் கொண்டு வாகனத்தில் 4 பேர் பிரயாணித்தனர்

இந்த வாகனத்தை வீதியில் வைத்து பொலிசார் மறித்து இவர்களுக்கு எதிராக  சட்டவிரோத தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் கீதங்கள் ஒலிபரப்பிய  போன்ற குற்றச்சாட்டில் கைது செய்ததுடன் வாகனத்தை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.