(த.சுபேசன்) கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக 26/11 ஞாயிற்றுக்கிழமை மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டதுடன்-மாவீரர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மேற்படி மதிப்பளிப்பு நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள்,உறவினர்கள்,முன்னாள் போராளிகள்,சமூக சேவகர்கள்,அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தென்மராட்சியைச் சேர்ந்த 25 மாவீரர்களின் உறவுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டதுடன்-மாவீரர்களின் ஞாபகார்த்தமாக தென்னை மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.