பொருளாதார நெருக்கடியால் ஒரு குடும்பம் இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்றுள்ளது.

( வாஸ் கூஞ்ஞ) குடும்ப பொருளாதார நெருக்கடியால் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக பாக்குநீர் ஊடாகச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் திங்கள் கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக ஆரம்ப விசாரனையில் தெரிய வருவதாவது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஏழு நபர்கள் ஒரு படகின் மூலம் ஞாயிற்றுக் கிழமை (26) இரவு 8 மணிக்கு மன்னார் கடலூடாகச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் சுழிப்புரத்தைச் சார்ந்த நாகராசா (43) , வனிந்தினி (38) , அஜந்தன் (18) , கிசாளினி (17) , அனோஜன் (13) , கஜீவன் (09) மற்றும் தனுசிக்கா (04) ஆகியோரே சென்றுள்ளனர்.

இவர்கள் தனுஷ்கோடி பாலத்துக்கு அருகாமையிலேயே இருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் , இவர்கள் சென்ற படகுக்கு ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா வழங்கியே தாங்கள் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வாழ முடியாத நிலையாலேயே தாங்கள் வந்ததாக தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.