காத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தில் பங்கு கொண்ட  உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி  வைப்பு.

(எம்.ஏ.ஏ.அக்தார்)   காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தினால் காத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தில் பங்கு கொண்ட அதன் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் வைபவம்  காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து காத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தில் பங்கு கொண்டு டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கை மற்றும் டெங்கு ஒழிப்பு வேலைகளில் ஈடுபட்ட  காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் 100 உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற  இந்த நிகழ்வில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நசிர்தீன் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் மீரா  முகைதீன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதம கணக்காளர் எம் ஏ.எம். சுஹைர்  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.ஐ.எம்.றம்சி மற்றும் காத்தான்குடி இளைஞர் சம்மேளன தலைவர் சாபிர்  உட்பட  காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின்  பணிப்பாளர்கள் அதன் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது காத்தான்குடியில்  பல வருடங்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவைகள் அதிகாரியாக கடமையாற்றி  ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள  றம்சி அவர்களை கெளரவித்து நினைவுச் சின்னம் வழங்கி  வைக்கப்பட்டது.