(எம்.எம்.றம்ஸீன் ) அட்டாளைச்சேனை நடுவர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் புதிய நிர்வாக சபைத் தெரிவும், கடந்த கால செயற்பாடுகளின் முன்னேற்றம் என்பன கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை நடுவர் சங்கத்தின் தலைவராக அம்பாறை மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எஸ். எல். தாஜுதீன் தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக உடற்கல்வி ஆசிரியர் ஏ. எம். ரிப்கி அகமட் அவர்களும், பொருளாளராக உடற்கல்வி ஆசிரியர் எம் எம். முபீர் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
சங்க உறுப்பினர்களுள் புதிதாக அதிபர்களாக செய்யப்பட்ட சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் ஏ.எல். அஜ்மல் ,உடற்கல்வி ஆசிரியர் என். கே .எம். மிஸ்வர் ஆகியோர் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.