மன்னார் மைந்தன் அர்ஜூன் மாவட்டத்தில் முதன்முதலாக நீதிபதியானதும் வாழ்த்துக்கள் குவிகின்றன.

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் முதலாவது சட்டத்தரனியாக நியமனம் பெற இருக்கும் கௌரவ அரியரட்ணம் வில்பிரட் அர்ஜூன் அவர்களுக்கு பல பாகங்களிலிருந்தும் அமோக வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் காணப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த கௌரவ அரியரட்ணம் வில்பிரட் அர்ஜூன் அவர்கள் மன்னார் மாவட்டத்தின் முதலாவது நீதிபதியாக  எதிர்வரும் 01.12.2023 தொடக்கம் இலங்கையின் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்படவுள்ளார்.

மன்னார் நகரத்தில் வசித்து வரும் இவர் அமரர்களான திரு திருமதி அரியரட்ணம் ஜெசி ஆகியோரின் புத்திரரும் மன்னாரில் மிகவும் பிரபலயமான அமரர் சட்டத்தரனி ஜெயராஜா அவர்களின் பேரனுமாவார்.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர் அன்றும் இன்றும் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கி வருகின்றார்.

இவருடைய பேரனார் தொடக்கம் இவர் வரை இவருடைய குடும்பங்கள் பொதுநல பணிகளில் மிகவும் சிறந்து விளங்கியது மன்னாரில் யாவரும் அறிந்தவையே.

கௌரவ அரியரட்ணம் வில்பிரட் அர்ஜூன் அவர்கள் நீண்டகாலமாக மன்னார் பிரஜைகள் குழுவில் இணைந்து கொண்டு பல பொது பணியில் ஈடுபட்டு வந்தவர்.

வீணாக மக்கள் பிரச்சனைகளுக்கு உள்ளாகாது இருக்கும் நோக்குடன் தன்னை நாடி வரும் மக்களாக இருக்கலாம் அல்லது எதாவது கூட்டங்களாக இருக்கலாம் சட்டத் திட்டங்களை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவு படுத்துவதையும் காணக்கூடியதாக இருந்தது.

தற்பொழுது மன்னாரில் முதன்முதலாக ஒரு இளம் சட்டத்தரனி நியமனம் பெற்றிருப்பது இவருக்கு மன்னார் மக்கள் மற்றும் அமைப்புக்கள் பல பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.