மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சி உப தலைவர் ச.நகுலேஸ் 14 நாட்கள் விளக்கமறியல்

(;கனகராசா சரவணன்)

ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டக்களப்பு வெல்லாவெளியில் உள்ள காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கட்சியின் உப தலைவர் சங்கரப்பிள்ளை நகுலேஸ்  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் இன்று சனிக்கிழமை(25) உத்தரவிட்டார்.

வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டக்களப்பு அம்பாறை தலைமைக் காரியாலயத்தில் இன்று மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு மாவீரர்களின் பெற்றோர் ஒன்று கூடினர்.

இந்த நிலையில் வெல்லாவெளி பொலிசார் குறித்த காரியாலயத்துக்கு சென்று மாவீரர்களை கௌரவிக்கும்  நிகழ்வு சட்டவிரோதமானது நிகழ்வை நிறுத்துமாறு தெரிவித்து நீதிமன்ற தடை உத்தரவை மீறி சட்டவிரோத ஓன்று கூடல் செய்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டின் கீழ் கட்சியின் உபதலைவர் ச.நகுலேஸ் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட அவரை  களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 8ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிட்டார்.