முதியோரை கௌரவத்துடன் நடாத்துவது பற்றிய ஆராய்வு ‘டெப்பிலிங்’ நிறுவனம்.

(வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் இயங்கி வரும் ‘டெப்பிலிங்’ நிறுவனமானது கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தனது வேலைத் திட்டங்களை நடாத்திக் கொண்டு வருகின்றது.

இதில் முக்கியமாக முதியோரை கௌரவத்துடன் நடாத்துவது என்ற கருப்பொருளிலே இந்நிகழ்ச்சித் திட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாகவே ஊடகவியலார்களுடனான ஒரு சந்திப்பை எற்படுத்தி மன்னாரில் அதாவது மாந்தை மேற்குப் பகுதியில் நடைபெறும் இத்திட்டம் எவ்வாறான தாக்கத்தை எற்படுத்தியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் முகமாகவும் ,
இங்கு கலந்து கொள்ளும் அரச அதிகாரிகளும் எங்களுடன் இந்த முதியோர் திட்டத்துக்கான பங்களிப்னையும் செய்து வருவதால் அவர்களும் இதை மேலும் தெரிந்து கொள்ளும் முகமாக இந்த அமர்வை நாம் மேற்கொண்டுள்ளோம்.

இத்திட்டத்தின் மூலமாக நாம் எதிர்காலத்தில் எவ்வாறான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். என்ற கருத்துக்களை பறிமாறிக் கொள்ளும் முகமாகவே நாம் இந்த அமர்வை மேற்கொண்டுள்ளோம் என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இக்கூட்டமானது வியாழக்கிழமை (23.11.2023) மன்னார் ஆகாஷ் ஹொட்டலில் மெதடிஷ்த திருச்சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘டெவ்லிங்’ அமைப்பினால் நடாத்தப்பட்டது.

இதில் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் , இந்த திட்டத்தில் நன்மை அடைந்துவரும் முதியோர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் இவ் அமைப்பின் மன்னார் அனுராதப்புரம் திட்ட இணைப்பாளர் ஜெயடியூலா , மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.என்.நிமால் . உதவி மாவட்ட செயலாளர் டிலிசன் பயஸ் , மடு பிராந்திய சுகாதார வைத்திய கலாநிதி டெனி மற்றும் மாந்தை மேற்கு நிர்வாக கிராம அலுவலகர் எவ்.ஏ.நிமால் ஆகியொரும் கலந்து கொண்டு உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.