மட்டக்களப்பு மின்சார சபை காரியாலயத்தின் இரத்ததான நிகழ்வு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு பிரதேச பிரதம மின் பொறியியலாளர் காரியாலய ஊழியர்களினால் மாபெரும் இரத்ததான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு பிரதேச பிரதம மின் பொறியியலாளர் காரியாலயத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக செயற்பாட்டின் ஓரங்கமாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு வைத்தியர்களது வேண்டுகோளுக்கு அமைய இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண குடிசார் பொறியியலாளர் எம்.ரமண சுந்தரனின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு பிரதேச பிரதம மின் பொறியியலாளர் வி.வரோதயன் தலைமையில் இரத்தான முகாம் ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது.இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாணத்தூக்கான மேலதிக பிரதிப் பொது முகாமையாளர் டபிள்யு.எல்.எஸ்.கே.விஜேதுங்கவும் இரத்தான முகாமில்
கலந்துகொண்டிருந்ததுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினர் குருதி மாதிரிகளைச் சேகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.