தாய்லாந்தின் 2023 யிற்கான உலக இந்து காங்கிரசின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் இ.தொ.கா  தலைவர் செந்தில் தொண்டமான்.

தாய்லாந்தில் இடம்பெறவிருக்கும் 2023 யிற்கான உலக இந்து காங்கிரசின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் பங்கேற்க உள்ளார்.
தாயலாந்துக்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள செந்தில் தொண்டமான், இன்று 24 முதல்  தாய்லாந்தில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.
இந்நிகழ்வில் இந்தியா,அமெரிக்கா,நோர்வே,கனடா,ஜெர்மன்,அவுஸ்ரேலியா,கென்யா, கட்டார் போன்ற 100 யிற்கும் மேற்பட்ட  நாடுகளை சேர்ந்த  இராஜ தந்திரிகள்,அரசியல் தலைமைகள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளமை  குறிப்பிடத்தக்கது.