கோறளைப்Uற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாடசாலை இடைவிலகல் தொடர்பான  களத்தரிசிப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)   கோறளைப்Uற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் தியாவட்டவான் 210 C கிராம உத்தியோகத்தர் பிரிவில் பாடசாலையை விட்டு இடைவிலகிய, ஒழுங்கீனமாக பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகள் மற்றும் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் பிள்ளைகள் தொடர்பான களத்தரிசிப்பு இன்று இடம்பெற்றது.

சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் சிறுவர் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள், குறித்த பிரிவின் கிராம  சேவை உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் நன்னடத்தை, பொலிஸ், கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கு கொண்டனர்.மேலும் இப்பிள்ளைகள் தொடர்பான கலந்துரையாடல் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா தலைமையில் நடைபெற்றதுடன் வறிய குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனுக்கான புத்தகப்பையும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.