நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான  கபடிப் போட்டியில்  வரலாற்றுச் சாதனை.

(அஸ்ஹர் இப்றாஹிம்) கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை கபடி சங்கம் நடாத்திய தேசிய மட்ட கபடி போட்டியில் நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை 15 வயதிற்குட்பட்ட கபடி அணி முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டது.
பாடசாலையின் 18 வயதிற்குட்பட்ட கபடி அணி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுக் கொண்டனர்.
கபடிரபோட்டிகள் யாவும் கம்பஹா New Saniro Airport Sports Complex  வில் கடந்த 17,18,19 ஆகிய தினங்களில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.ஏ.கபூர் உள்ளிட்ட கல்வி சமூகம் வெற்றியீட்டிய மாணவர்கள் ,கல்முனை கல்வி வலயம் சார்பாக பங்கு பற்றிய நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் கபடி அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய சர்வதேச கபடி நடுவரும், இலங்கை கபடி சங்க நடுவரும், அம்பாரை மாவட்ட கபடி சங்க செயலாளரும், பயிற்றுவிப்பாளருமான  ஆசிரியர் எஸ்.முஹம்மட் இஸ்மத் , அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் கபடி அணியின் பொறுப்பாசிரியர் ஏ.ஹலீம் அஹமத்  , பிரதி பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய  Pro கபடி வீரர், இலங்கை கபடி அணித்தலைவர் எம்.ரீ.அஸ்லம் சஜா, போட்டிக்கு அழைத்துச் சென்று வழி நடாத்திய மதீனா பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் என்.முஹம்மட் நிப்ராஸ், நிந்தவூர் விளையாட்டு மற்றும் சமூக சேவைகள் அமைப்பு மற்றும் வீரர்களின் பெற்றோர்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.