(அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கையில் இடம்பெறும் பெண்களுக்கான முதல்தர கழகங்களுக்கான கடினப்பந்து கிரிக்கெட் போட்டியில் திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை சஜந்தினி இலங்கையின் முன்னணி கழகமான SSC யின் முதல் பதினொருவர் அணிக்குள் களமிறக்கப்பட்டார்.
குறித்த போட்டியில் அவர் 4 ஓவர்கள் பந்துவீசி 15 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.
இதன்மூலம் மன்னார் மாவட்டம் சார்பாக ஒரு முதல்தர கழகத்தில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீராங்கனையாக இவர் சாதனை புரிந்திருக்கின்றார்.
அத்தோடு, SSC அணியின் முதல் 15 வீராங்கனைகளுக்குள் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மற்றுமொரு வீராங்கனையான சலோமி அவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் பேசாலை பற்றிமா பாடசாலையைச் சேர்ந்த வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.