ஓட்டமாவடி பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சரினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

(அஸ்ஹர் இப்றாஹிம்)   ஓட்டமாவடி முன்னாள் கிராம சேவை உத்தியோஸ்தரும் ,  பிரதேச சபை உறுப்பினருமான எம்.எம். ஹனிபா அவர்களின்  அயராது முயற்சியினால் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள்   கௌரவ விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேசத்தைச்  சேர்ந்த வளர்பிறை விளையாட்டுக்கழகம், நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகம்,  யங் சோல்ஜஸ் விளையாட்டுக்கழகம், சல்சபீல் விளையாட்டுக்கழகம் ,ரோயல் விளையாட்டுக்கழகம் ஆகிய விளையாட்டுக் கழகங்களுக்கே இவ்வாறான பெறுமதி வாய்ந்த விளையாட்டு  உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டன.