திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு விஜயம்.

(ஹஸ்பர்)   திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரான சாமிந்த ஹெட்டியாராய்ச்சி தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு விஜயமொன்றை  (21) மேற்கொண்டார். மாவட்ட அரசாங்க அதிபராக அண்மையில் கடமையேற்ற பின் முதற் தடவையாக கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பிரதேச செயலக உள்ளக வெளியக மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது கடந்த காலங்களில் தேசிய மாவட்ட மாகாண மட்ட ரீதியில் சாதனை புரிந்த அலுவலக உத்தியோகத்தர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டார்கள் . பிரதேச செயலகத்தில் இயங்கும் ஒவ்வொரு கிளையினையும் மேற்பார்வை செய்த மாவட்ட அரசாங்க அதிபர் அரச சேவை ஆளணி வளங்கள் பற்றாக்குறை தொடர்பிலும் அரச சேவைகளை நேர்த்தியாகவும் வினைத்திறனுடனும்  மக்களுக்கு வழங்குவது தொடர்பில் தனது உரையின் போது தெரிவித்திருந்தார்.
மாவட்ட அரசாங்க அதிபரை உதவி பிரதேச செயலாளர் பொன்னாடை வழங்கி இதன் போது கௌரவித்தார்.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், நிருவாக உத்தியோகத்தர் உடகெதர  ,சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக்,உதவி மாவட்ட பதிவாளர் அஸ்வர் மற்றும் கிளைத் தலைவர்கள் சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.