களுவாஞ்சிக்குடியில் நீர் வெறுப்பு நோய் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு.

( காரைதீவு   சகா)   களுவாஞ்சிக்குடியில் நீர் வெறுப்பு நோய் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு  நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.
சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார, மிருக வைத்திய சேவைப் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘இலங்கையை நீர்வெறுப்பு நோயற்ற ஒரு நாடாக மாற்றுவோம்’ எனும் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வானது களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்றது
 பொதுச் சுகாதார மிருக வைத்திய சேவைப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர். தர்ஷானி திசாநாயக்கவின் பங்கேற்புடன் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது விசர்நாய்க்கடி நோய் தொடர்பான விளக்கம், நோய்த்தடுப்பு தொடர்பான வழிமுறைகள், எம்மால் கடைப்பிடிக்க வேண்டிய சமூகப் பொறுப்புக்கள் மற்றும் பிற விலங்குகளின் நோய்த் தொற்றுகளிலிருந்து தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்பன பொதுச் சுகாதார மிருக வைத்திய சேவைப் பிரிவின்  பணிப்பாளர் டாக்டர். தர்ஷானி திசாநாயக்க, மருத்துவ உத்தியோகத்தர் டாக்டர் வைசி. குருகே மற்றும் கால்நடை வைத்திய  அதிகாரி ஆகியோரினால் மிகவும் சிறப்பான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பொதுச் சுகாதார மிருக வைத்திய சேவைப் பிரிவின் உத்தியோகத்தர்கள், களுவாஞ்சிகுடி சுகாதார  வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (திட்டமிடல்), சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.