கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி மாணவன் எம்.ரீ.எம்.அர்மாஸ்  வரலாற்றுச் சாதனை.

(அஸ்ஹர் இப்றாஹிம்)  கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரியில்  தரம் 11-ல் கல்வி கற்கும் மாணவன் எம்.ரீ.எம்.அர்மாஸ் வரலாற்றுச் சாதனை படைத்து கல்லூரியின் புகழை மிளிர வைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் United Nations Association Coventry கிளையினால் நடத்தப்பட்ட சர்வதேச நிகழ்நிலை மூலமான கட்டுரை போட்டியில் “அமைதியான உலகிற்கு இளைஞர்களின் பங்களிப்பு”  என்னும் துணைப் பொருளில் ஆங்கில மொழி மூலமான கட்டுரைப் போட்டியில்  இம் மாணவன் சர்வதேச ரீதியில் 15-17 வயது பிரிவில் பங்கு பற்றி மூன்றாம் இடத்தினை பெற்று இச்சாதனையை படைத்துள்ளார்.
இம் மாணவனின் இச்சாதனைக்காக சர்வதேச தரத்திலான சான்றிதழும் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான பண பரிசினையும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் United Nations Association Coventry கிளையினால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.