முகாமையாளர் மோசேஸ் புவிராஜ் கெளரவிப்பு

( எம்.என்.எம்.அப்ராஸ்)
 கல்முனை பிரதேச செயலகத்தின் கல்முனை சமுர்த்தி வங்கியின் முகாமையாளராக கடந்த 5 வருடங்கள் சிறப்பாக கடமையாற்றி மக்களினதும் உத்தியோகத்தர்களினதும் மனதில் இடம்பிடித்து தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடம் மாற்றம் பெற்று சென்றுள்ள முகாமையாளர் மோசேஸ் புவிராஜ் அவர்களை கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள சமுர்த்தி முகாமையாளர்கள்,மற்றும் அனைத்து சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் இணைந்து கெளரவித்த பிரியாவிடை நிகழ்வு கல்முனை சமுர்த்தி வங்கியில் வங்கி முகாமையாளர் யு.கே.சிறாஜ் தலைமையில் நேற்று (18)இடம்பெற்றது.
 இதில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்தலி,தலைமைபீட சிரேஷ்ட சமூர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஏ.எம்.பைசால், வங்கி உதவி முகாமையாளர் எம்.எஸ்.எஸ்.றிபாயா,வலய உதவி ஐ.எல்.அர்சுத்தீன் மற்றும் வங்கி உத்தியோக த்தர்கள்,பிரிவுகளின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கட்டுப்பாட்டு சபை தலைவர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
 இதன் போது இங்கு உரையாற்றிய கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்தலி,
கல்முனை பிரதேச செயலக பிரிவில் கல்முனை வலய சமுர்த்தி வங்கி முகாமையாளராக இருந்த போது மோசேஸ் புவிராஜ் மிகவும் சிறப்புடன் முழு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர் இவரின் சேவைக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.
 நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா காலத்தில் தான் வசிக்கும் மட்டக்களப்பு மாவட்டம் சுமார் 60 கிலோ மீற்றர் கடந்து சேவையை முதன்மையாக கொண்டு கல்முனை பிரதேசத்தில் செயலாற்றினார்.
இவரின் காலத்தில் எமது அம்பாரை மாவட்டதில் கல்முனை சமுர்த்தி வங்கியானது முதன்மையானதாக காணப்பட்டதுடன் கல்முனை சமுர்த்தி வங்கி கணனிமயப்படுத்தல் இவரின் சேவைக்க்காலத்தில் இடம்பெற்றது மேலும் வங்கியினை அழகுபடுத்தல்,பொது மக்கள் மத்தியில் சினேக பூர்வமாக தனது சேவைக் காலத்தில் கடமை புரிந்து நன் மதிப்பினையும் ஓருவராக திகழ்ந்தவர் இவரின் அர்ப்பணிப்புமிக்க சேவையினை பாராட்டுகின்றேன் மேலும் சமுர்த்தி சேவையில் உயர் முன்னேற்ற நிலை அடைய வாழ்துக்களை தெரிவித்தார்.
 மேலும் இதன் போது நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் சேவைக்கால நினைவுகள் தமது வாழ்த்துக்களை இடமமாற்றம் பெற்ற முகாமையாளர் மோசேஸ் புவிராஜுக்கு தெரிவித்தனர்.