காரைதீவில் களை கட்டிய சூரசம்ஹாரம்

( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு கந்தசுவாமி  ஆலயத்தின் வருடாந்த சூரசம்ஹார நிகழ்வு ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

சூரசம்ஹார நிகழ்வு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கோவர்த்தன சர்மா தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஆலய  பரிபாலன சபையினர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஆலய சுற்று வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சுமார் மூன்று மணி நேரம் கடும் சமர் இடம்பெற்றது.
 ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணத்துடன் .
கந்தசஷ்டி விரதம் நிறைவு பெறுகிறது