பத்தாயிரம் பனைவிதைகள் மற்றும்வேம்பு மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு.

கல்முனை நகர லயன்ஸ் கழகம் மற்றும் காரைதீவு லயன்ஸ் கழகம் என்பவை ஏனைய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து
பத்தாயிரம் பனைவிதைகள் மற்றும்வேம்பு மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
இவ் வேலைத்திட்டம் காரைதீவு கடற்கரை பிரதேசத்தில் லயன்ஸ் கழகத்தின் தலைவர்களான லயன் எந்திரி ம.சுதர்ஷன் மற்றும் லயன் எந்திரி த.சுரேந்திரகுமார் ஆகியோரின் தலைமையில் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.
கடற்கரையில் பனைமர விதைகளை நடுதல்,
கடற்கரையை சுத்தப்படுத்துதல்,
டெங்கு விழிப்புணர்வு பதாகையை காட்சிப்படுத்தல்,
டெங்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற திட்டங்களை முன்னெடுக்கும்
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சர்வதேச லயன்ஸ் மாவட்ட ஆளுநர் (306C2) லயன் இஸ்மத் ஹமீத் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
ஐயாயிரம் பனை விதைகள் மற்றும் ஐயாயிரம் வேம்பு மரக் கன்றுகள் நடும் திட்டமாக இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் ம.சுதர்சன் தெரிவித்தார்.
 சிறப்பு அதிதிகளாக பல பிரமுகர்களும்
மற்றும் அரச/ அரச சார்பற்ற  நிறுவனங்களின் அதிகாரிகளும் ஊழியர்களும் கழக உறுப்பினர்களும் மற்றும் தொண்டர்களும்  கலந்து கொண்டிருந்தனர்.