நிந்தவூர் ஆதார வைத்திய சாலையின் உலக நீரிழிவு தின நிகழ்வுகள்.

(அஸ்ஹர் இப்றாஹிம்)  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம்.  றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைவாக உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நிந்தவூர்  ஆதார வைத்தியசாலையும்  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து உலக நீரிழிவு தின விழிப்புணர்வு நடைபவனி நிகழ்வும் கருத்தரங்கும் இடம் பெற்றது.
நிந்தவூர் ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.பி.அப்துல் வாஜித் தலைமையில் “நீரிழிவுக்கான பராமரிப்பை அணுகுவோம்” எனும் தொனிப் பொருளில் இடம் பெற்ற நடைபவனி
பெரிய பள்ளிவாசல் முன்றலில் இருந்து வைத்தியசாலை வரை இடம்பெற்று தொடர்ந்தும் விழிப்புணர்வு கருத்தரங்கும் நடைபெற்றது. இதில் வைத்தியசாலையின் வைத்தியர் ஏ.எம். சுமைய்யா அவர்கள் விரிவுரையாற்றினார்கள் .
நிந்தவூர்  ஆதார வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள்,தாதிய மேற்பார்வையாளர்கள், தாதியர்கள்,ஏனைய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்,
மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்திய அதிகாரி ,
பொது சுகாதார பரிசோதகர்கள்,  குடும்ப நல உத்தியோகத்தர்கள்,  நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகசபை தலைவர் ,பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,அறபு கல்லூரி மாணவர்கள் , வைத்தியசாலைக்கு வந்திருந்த பயனாளிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வின் போது ஆயுர் வேத வைத்தியசாலையினால் இலைக்கஞ்சியும் பரிமாறப்பட்டது . “இனிப்பை குறைப்போம் நீரிழிவை ஒழிப்போம்” தொனிப்பொருளில் மேற்படி  நிகழ்வுகள் நடைபெற்றன.