பாடசாலைகளில் தொழில் முயற்சியாண்மை வட்டம்  தேசிய வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்.

( வி.ரி. சகாதேவராஜா)   ஜனாதிபதியின்  ஆலோசனைக்கமைய இலங்கையின் கல்வி அமைச்சும் கைத்தொழில் அமைச்சும் இணைந்து கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் ஊடாக பாடசாலைகளில் தொழில் முயற்சியாண்மை வட்டம் என்ற தேசிய வேலைத்திட்டத்தை அமுலாகி வருகின்றது.
 அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் முதன் முதலாக திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் இவ் வேலைத்திட்டம் நேற்று (14) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் செல்வரெத்தினம் குணபாலன் சிறப்புப் பேச்சாளராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வு பாடசாலையின் பிரதி அதிபர் சி. மதியழகன்  தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவத்துறை சிரேஷ்ட பேராசிரியர் செல்வரெத்தினம்.குணபாலன்  விருந்தினராக Morrich (Pvt) Ltd. நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்பிஎம்..நளீம்  இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் அம்பாரை மாவட்ட பிரதி பணிப்பாளர் கேஎல்ஏ.  ஆரியகீர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கைத்தொழில், முயற்சியாண்மை, தேசிய மற்றும் சர்வதேச சந்தைவாய்ப்புக்கள், தொழிற்சந்தை மற்றும் மாணவர்களின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை விரிவாக உரையாற்றியதோடு பாடசாலை கைத்தொழில் முயற்சியாண்மை வட்டங்களையும் தெரிவு செய்து வழிப்படுத்தினர்.
வேலைத்திட்டத்தில் மாணவர்கள் கலந்து பயனடைந்தார்கள்.
இதன்போது கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர்களான ஐஎல்எம்.சப்ரீ, எஸ்.  அபேரத்ன மற்றும் எம் ஏ எம். முர்ஷித் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்..
வலயத்துக்கு ஒரு பாடசாலை தெரிவு செய்யப்பட்டு இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.