உலக நீரழிவு தினமான இன்று மட்டக்களப்பு மாவடிவேம்பு வைத்தியசாலை நிர்வாகத்தினரால் நடை பவனி ஏற்பாடு நடைபவனி மூலம் சமூகங்களுக்கு இடையில் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் வைத்தியர் தெரிவிப்பு ஆரம்ப சுகாதார சேவையினை வலுப்படுத்தும் செயற்திடத்தின் ஊடாக இன்று மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகஸ்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் கிராம நலன் விரும்பிகள் வைத்தியசாலை நிர்வாகத்தினர் மற்றும் நீரழிவு கிளினிக் பயனாளிகள் அனைவரின் பங்குபற்றுதலுடன் விழிப்புணர்வு நடை பவனி இன்று காலை 9 மணி அளவில் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக வந்தாறுமூலை பொதுச் சந்தைக்கு முன்பாக கூடி மீண்டும் பிரதான வீதி ஊடாக சென்று வைத்தியசாலையை அடைந்தனர் மாவடிவேம்பு பிரதேச வைத்திய சாலைக்கு பொறுப்பான பொறுப்பு வைத்திய அதிகாரி திருமதி வி. தனுஷியா தலைமையில் நடைபெற்ற இந்த நடை பவணி நிகழ்வில் வைத்தியர்களான திருமதி குனமணி திரு எம் அப்துல் ஹக். பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி யோ. திருச்செல்வி மறரும் முன்னாள் ஏறாவூர் பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் புத்திசிகாமணி சசி அவர்களும் கிராமம் சார்பாக பலரும் கலந்து கொண்டனர்.
|