கொழும்பு சைவ மங்கயர் பெண்கள் இந்துக் கல்லூரி மாணவிகள் தேசிய மட்ட தமிழ்மொழித்தின போட்டியில் பிரகாசிப்பு.

(அஸ்ஹர் இப்றாஹிம்)   அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டியில் கொழும்பு சைவ மங்கயர் பெண்கள் இந்துக் கல்லூரி மாணவிகள்  பங்குபற்றி  மொத்தம் 32 பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இசைக்குழு 1, இசைக்குழு 2, நாட்டிய நாடகம் என்பன இரண்டாம் இடங்களையும், வாசிப்பு -பிரிவு 3, இசை தனி – பிரிவு 1 என்பன மூன்றாம் இடங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் நெறிப்படுத்திய ஆசிரியர்கள் திருமதிகள் தாரணி இராஜ்குமார்,  ஹம்சா பிரபாகர்,ஷாலினி வாகீஸ்வரன், நிவாசினி சக்திவேல், அமுதினி மலர் செல்வன், திரு.இ.ஸ்ரீகாந், திரு வாசுதேவா  ஆகியோருக்கு அதிபர் உள்ளிட்ட  கல்வி சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.