பாகிஸ்தானுக்கு திருப்பியனுப்பட்ட செத்தல்மிளகாய் கொள்கலன்கள்.

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 25 மிளகாய் கொள்கலன்களில் அஃப்லாடோக்சின் கலந்திருந்தமையால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உணவின் தரம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு விசேட தொலைபேசி இலக்கமொன்றை (0112112718) அறிமுகப்படுத்தியுள்ளது