2024 வரவுசெலவுத்திட்டம்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை நாளை (13) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நிகழ்வு நிதி அமைச்சராகவும் கடமையாற்றுகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடைபெறவுள்ளது.

இன்று (12) முற்பகல் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இறுதிக் கட்டத் தயாரிப்பு மற்றும் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.