தலைவரால் சர்வதேசத்திலிருந்து ஒரு டொலரைக் கூட மேலதிகமாக நாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நல்ல மூளைசாலி,சிறந்த சர்வதேச தொடர்புள்ளவர் என நியமித்த நாட்டின்  தலைவரால் சர்வதேசத்திலிருந்து ஒரு டொலரைக் கூட மேலதிகமாக நாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை என்றும்,சகல பொருட்களும் கடனாகவே பெறப்பட்டதாகவும்,மனிதாபிமான உதவிகளாகவே கிடைத்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அஸ்வெசும திட்டத்தைக்கூட முட்டாள்தனமான முறையில் செயல்படுத்தினார்கள் என்றும்,குடும்ப அலகின் வருமான செலவினம் அடங்களான சனத்தொகை கணக்கெடுப்பே முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும் அது அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை என்றும்,

இதன் காரணமாக உலக வங்கியில் இருந்து பெறப்பட்ட பணம் எந்த அறிவியல் பின்புலமும் இல்லாமல் பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும், இதன் பின்னரே தற்போது சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நாடு நல்ல பாதையில் செல்ல முடியும் என்றாலும்,எடுக்கும் ஒவ்வொரு எட்டும் ஆதாரம் மற்றும் தரவுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக செய்யப்பட வேண்டும் என்றும்,இவ்வாறின்றி நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என்றும்,மாற்று அணி என்று கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் உலகம் பூராகவும் திரிந்து, ஐக்கிய மக்கள் சக்தி செயல்படுத்தும் நேர்மறையான திட்டங்களுக்கு சேறு பூசும் நடவடிக்கையை மட்டும்தான் செய்து வருகின்றனர் என்றும்,

ஐக்கிய மக்கள் சக்தி தற்போது நாட்டிற்கு தேவையான டொலர்களை கொண்டு வரும் நிலையான வேலைத்திட்டத்தையே நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்மார்ட் வகுப்பறை என்பது மனித மூலதனத்தை கட்டியெழுப்புவதற்கான முதலீடு

என்றும்,நாட்டின் 41 இலட்சம் மாணவர் தலைமுறை அறிவாற்றலுடன் சித்தப்படுத்தி,நல்ல திறன்கள் மற்றும் ஆளுமைகள் கொண்ட மனித வளக் குழு இதனால் உருவாக்கப்படும் என்றும்,உலகத் தரத்திலான திறன்களை வழங்குவதன் மூலம், தேசிய மற்றும் சர்வதேச தொழிலாளர் சந்தையில் அவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைக்குச் செல்ல முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சில அரசியல்வாதிகளுக்கு ஸ்மார்ட் நாடு என்பது வெறும் வார்த்தையாகவே மட்டும் உள்ளதாகவும்,ஸ்மார்ட் நாடு என்றால் ஸ்மார்ட் கல்வி,ஸ்மார்ட் மாணவர்கள்,ஸ்மார்ட் இளைஞர்கள் மற்றும் ஸ்மார்ட் குடிமக்கள் இருக்க வேண்டும் என்றும்,இதனால் குறுகிய மனப்பான்மை இல்லாத குடிமகனே உருவாகுவான் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் உச்ச சட்டத்தில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளே மனித உரிமைகளாக கொண்டிருந்தாலும்,ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மனித உரிமைகளின் கீழ் கல்வி உரிமை,வாழ்வாதார உரிமை மற்றும் காணி உரிமையை உள்ளடக்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் 46 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியில் மஹரகம ஜனாதிபதி கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று மாலை (10) கலந்து கொண்டு உரையாற்றும் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.பிரபஞ்சம் பஸ் திட்டத்தின் கீழ் 80 அரச பாடசாலைகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பாடசாலை பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு 389,200,000.00 ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது.

பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் 46 அரச பாடசாலைகளுக்கு 424 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.