32 வருடகால கல்விச் சேவை ஆற்றிய ஆசிரியர் நடேசலிங்கம் ஓய்வு

( வி.ரி.சகாதேவராஜா)
கல்விப் பணியில் 32 வருட காலம் சேவையாற்றிய காரைதீவைச் சேர்ந்த ஆசிரியர் தம்பியப்பா
நடேசலிங்கம் தனது அறுபதாவது வயதில் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.
அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில்
13 வருட காலம் ஆசிரியராக பிரதி அதிபராக ஆக பணியாற்றினார்.
அவருக்கான பிரியாவிடை வைபவம் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் அதிபர் ச.ரகுநாதன் தலைமையில் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது .
ஆளுயர மாலை சூடி பிறந்த நாள் கேக் வெட்டி பிரியாவிடை வைபவம் நடைபெற்றது.
 அவர் 1990இல் தலவாக்கலை சென்கூம்ஸ் வித்தியாலயத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்பு மாளிகைக்காடு சபீனா வித்யாலயம் காரைதீவு பெண்கள் பாடசாலை ஆகியவற்றில் சிறப்பான சேவையாற்றினார்.
இவர் ஆஸ்திரேலியா ஒஸ்கார் நிறுவனம் மற்றும்
சிட்னி உதயசூரியன் கல்வி மேம்பாட்டு நிலையம் போன்றவற்றினால் பல உதவிகளை இப்பிரதேசத்துக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.
 மேலும் காரைதீவு விபுலானந்த பணி மன்ற நிருவாக சபை உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.