நாவிதன்வெளியில் உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)  நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி தலைமையில் (9) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார். இதன் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் ஒரு குடும்பத்திற்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான 15000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் பி. பிரணவரூபன், உலக உணவு திட்டத்தின் இணைப்பாளர் எஸ்.பாக்கியநாதன், அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஏ. அனீஸ், பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராஜா, நிர்வாக உத்தியோகத்தர் கே. யோகேஸ்வரன் சமூர்த்தி தலைமை பீட முகாமையாளர் எஸ் சிவம் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.