(ஏறாவூர் நிருபர் ) குவைத் நாட்டின் அப்துல்லா அந்நூரி அமைப்பின் சுமார் ஆறு மில்லியன் ரூபா நிதியுதவியுடன் மட்டக்களப்பு ஏறாவூர் – ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் அமைக்கப்படும் கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 09.11.2023 நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஏஎஸ். லாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்கப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்எம்எம். அமீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
அப்துல்லா அந்நூரி அமைப்பின் அபிவிருத்திப்பிரிவிற்கான ஐஎஸ்.ஆர்சி திட்ட இணைப்பாளர் ஜுனைட் நழீமி , பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்ஜேஎப். றிப்கா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இக்கலாசார மண்டபம் அடுத்த சுமார் மூன்றுமாத காலத்திற்குள் அடிப்படைவசதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்படவுள்ளது.
இற்றைக்கு இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னர் வாழ்வாதாரம் குறைவான மக்களைக்கொண்ட ஐயங்கேணி எனும் குக்கிராமத்தில் அமைக்கப்பட்ட அப்துல் காதர் வித்தியாலயத்தில் பௌதீக வளம் மற்றும் வசதிகள் குறைபாட்டினைக்கருத்திற்கொண்டு இக்கலாசார மண்டபம் அமைக்கப்படுவதாகவும் இப்பிரதேச மக்கள் இம்மண்டபத்தினை தமது பொதுத்தேவைகளுக்குப் பயன்படுத்த முடியுமென்றும் பாடசாலையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்எஸ். சப்றாஸ் தெரிவித்தார்.