பலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக குரல்.

(அஷ்ரப் ஏ சமத்)  நாங்கள் எல்லாம் ஒருவர் என்ற அமைப்பினரால் கொழும்பு 7 உள்ள ஹை பார்க் மைதானத்தில் நேற்று 07 ஆம் திகதி கொட்டும் மழையிலும் அனைத்து இன மத, அரசியல் மக்கள் ஒன்று கூடி பலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.
இந் நிகழ்வில் மும் மதத் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்,  சம்பிக்க ரணவக்க, பா.உ, இரான் விக்கிரமசிங்க பா.உ ஜே.வி.பி, விஜிதத் கேரத், பா. உ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுத்தீன்,பா.உ முன்னாள் அமைச்சர் மனோ கனேசன்,பா.உ தமிழ் தேசிய முன்னணியின் சார்பாக சாணக்கியன் இராஜமாணிக்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மான், ஜ.பி.எம்.. கெம்பஸ்  தலைவர் ஜனகன், தெரன தொலைக்காட்சி தலைவர் திலினி ஜெயவர்த்தன, பொறியியலாளர் அப்துல் ரஹ்மான், பலஸ்தீன் நாட்டின் துாதுவர் கலாநிதி  செய்யட் சுகையில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் செயலாளர்  அர்க்கம் மௌலவி, உட்பட பலரும்    பலஸ்தீனத்துக்கு ஆதவாக உரையாற்றினார்கள்.
 அத்துடன் கூட்ட முடிவில் மும் மொழிகளிலும் பலஸ்தீன் சார்பாக எடுக்கப்பட  வேண்டிய  தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஜ..நா. அலுவலகம் ஊடக அனுப்பி வைப்பதற்கு அங்கு குழுமியிருந்தார்கள் கையை உயர்த்தி அங்கிகரித்தார்கள்.
உடன் யுத்தம் நிறுத்தப்படல் வேண்டும். குழந்தைகள், வைத்தியசாலைகள், பெண்கள், பழியிடுவதையும், பள்ளிவாசல்கள் சொத்துக்கள் அழித்தமைக்காகவும் பலஸ்தீன அராபியர்களின் சுய நிலத்தினை ஆக்கிரமித்தமையும் கண்டித்து  இஸ்ரவேலரை உலக நாடுகள் இணைந்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.  இலங்கை அன்று தொடக்கம். பலஸ்தீன் நாட்டின் நண்பனாகவும் ஆதரவாகவும் இருந்து வருகின்றமையும் சகல அரசியல் கட்சித் தலைவர்களும் பலஸ்தீன் ஆதரவாக அங்கு  உரையாற்றினார்கள்
ஒரே மேடையில் சகல அரசியல் கட்சிகள் பேதமின்றி இங்கு குரல் கொடுத்தமைக்கு பலஸ்தீன் நாட்டுத் துாதுவர் நன்றி தெரிவித்தார்.
 அத்துடன் பாராளுமன்றத்தில் உள்ள சலக பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அதனை ஜக்கிய நாடுகள் கொழும்பு காரியாலயம் ஊடக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்டும். ஏற்கனவே நேற்று 80 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு ல்லாதாக றிசாத் பதியுதீன் அங்கு தெரிவித்தார்
எதிர்கட்சித் தலைவர் தனது தந்தை ரணசிங்க பிரேமதாச காலத்தில் பலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிவித்தார்.
பலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக ஜே.வி.பி ஆதரவாளர்கள், பௌத்த , இந்து,இஸ்லாம், கிறிஸ்தவம், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா  அங்கத்தவர்கள் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் உறுப்பிணர்கள், ஏராளமான பொதுமக்களும் கொட்டும் மழையிலும் அங்கு குழுமியிருந்ததை காணக்கூடியதாக  இருந்தது.