அம்பாறை மாவட்டத்திலும் தபாலகங்கள் பூட்டு.

(ஏ.எஸ்.மெளலானா)   ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் அழைப்பின் பேரில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் உள்ள தபால் நிலையங்களில் நேற்று புதன்கிழமை (08) வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தபால் சேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கல்முனை,  சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, ஒலுவில், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களிலுள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களும் முழுமையாக மூடப்பட்டிருந்தன.

இதனால் இப்பகுதிகளில் தபால் சேவைகள் முற்றாக முடங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத் தீர்மானத்திற்கு அமைவாக இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் தபால் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்ற அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.