ஜனநாயக சூழ்நிலையாக மாணவர்களை மாற்றுவதற்கு மாணவர் பாராளுமன்றம் அமைகின்றது.

(வாஸ் கூஞ்ஞ) பாடசாலைகளில் நிலவும் பிரச்சனைகளை தாங்களே இனம் கண்டு தாங்களே ஒரு தலைவராக மாறி அதற்கான தீர்வுகளையும் தெரிவிக்கும் ஜனநாயக சூழ்நிலையாக மாணவர்களை மாற்றுவதற்கு மாணவர் பாராளுமன்றம் அமைகின்றது என வலயக் கல்விப் பணிப்பாளர் வலய மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் செல்வி ஜி.டீ.தேவராஜ் இவ்வாறு தெரிவித்தார்.

2023 கல்வியாண்டுக்கான மன்னார் கல்வி வலய மாணவர் பாராளுமன்றம் திங்கள் கிழமை (06) மன்னார் கல்வி வலய மண்டபத்தில் இடம்பெற்றபோது வலயக் கல்விப் பணிப்பாளர் வலய மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் செல்வி ஜி.டீ.தேவராஜ் பாராளுமன்ற அமர்வுக்குப் பின் தொடர்ந்து உரையாற்றுகையில்

மாணவர் பாராளுமன்ற பிராதன வேலைத்திட்டமானது 03.02.2019 அன்று கல்வி அமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைவாக நடைபெற்று வருகின்றது.

ஜனநாயகத்தின் அடிப்படை எண்ணக்கருக்கள் தேசிய கல்வி பொதுக் குறிக்கோள் மற்றும் பொது தேர்ச்சி அடைவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாக்குதல் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான தேசிய வேலைத் திட்டமாக இது அமைகின்றது.

கற்றுக் கொண்ட பாடத்திட்டங்கள் பாடசாலைகளில் அறிமுகப்படுத்துதல் வௌ;வேறு மக்கள் இனங்களுக்கிடையேயும் சமயக் குழுக்களுக்கிடையேயும் கூட்டுச் செயல்பாடு , சகவாழ்வு , சகோதரத்துவம் , புரிந்து வாழ்தல் ஆகியவற்றை விருத்தி செய்து முரன்பாடுகளை தீர்ப்பதற்கு வழிகோணல் பிரதேச மற்றும் தேசிய அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு மாணவர்களை தேசியத்தில் கட்டி எழுப்புதல் நோக்காகக் கொண்டும் மாணவர்கள் மத்தியில் தலைமைத்துவத்தை விருத்தி செய்தல் போன்றவை குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

இன்றைய இந்த பாராளுமன்றத்தை நோக்கியபோது சரியான முறையில் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக புரிகின்றது.

பாடசாலைகளில் மாணவர் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குறிமையை சரியான முறையில் பயண்படுத்துவது என்ற அறிவினையை பாடசாலையில் பயிற்றுவிக்கப்படுகின்றது. இதுவும் ஒரு பிரதான நோக்கமாக உள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கும்போது செல்லுபடியற்ற வாக்குகள் என ஒரு குறிக்கப்பட்ட தொகை அறிவிக்கப்படுகின்றது நாம் அறிவோம்.

இவ்வாறு அமையக் கூடாது என பாடசாலை மட்டங்களிலேயே மாணவர்களுக்கு தெளிவுப் படுத்தப்படுகின்றது.

அத்துடன் ஜனநாயக பண்புகளை சரியான முறையில் அறிந்து கொள்வதற்றும் இது மாணவர்களுக்கு ஒரு சந்தர்ப்பமாகவும் அமைகின்றது.

மேலும் பாடசாலைகளில் நிலவும் பிரச்சனைகளை தாங்களே இனம் கண்டு தாங்களே ஒரு தலைவராக மாறி அதற்கான தீர்வுகளையும் தெரிவிக்கும் ஒரு சூழ்நிலையாகவும் இது அமைகின்றது.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர் பாராளுமன்றமே இதுவாகும். இது வலயத்திலிருந்து மாகாணத்துக்கும் பின் தேசிய மட்டத்துக்கும் இது முன்னெடுக்கப்பட உள்ளது.

இன்று இந்த பாராளுமன்ற அமர்வில் நீங்கள் முன்வைக்கப்பட்ட  பிரேரணைகள் பெரியோர்களால் சிந்திக்கப்படாத விடயங்களை முன்வைத்தது பாராட்டக் கூடியது.

நாங்கள் பாடசாலைகளில் மாணவர்களுக்கு  இவ்வாறான சந்தர்ப்பங்களை வழங்குவில்லை. ஆகவே நாம் இவ்வாறான செயல்பாடுகளுக்கு இவர்களுக்கு தளம் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் மற்றவர்களுக்கு மதிப்பளிப்பது மற்றவர்கள் கூறும் கருத்துக்களுக்கு செவிமடுப்பது அனைவரும் இணைந்து செயல்படுவது இது ஒரு வழி சமைக்கும் தளமாக அமைந்துள்ளது.

மன்னார் வலயம் கொடுத்து வைத்த வலயம். பல இன மாணவர்களும் கலந்து கொண்டு ஒன்றுபட்டு செயல்படும் வலயமாக இருப்பதால் இந்த பாராளுமன்றத்தில் நீங்கள் அனைத்து இன மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டு ஒன்றுபட்டு செயல்பட்டது பாராட்டுக்குரியது என வலயக் கல்விப் பணிப்பாளர் வலய மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் செல்வி ஜி.டீ.தேவராஜ் இவ்வாறு தெரிவித்தார்.