கிழக்கு பிரதம செயலாளர் கல்முனை மாநகர சபைக்கு திடீர் விஜயம்.

smart
(ஏ.எஸ்.மெளலானா)     கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்னாயக்க அவர்கள் நேற்று பிற்பகல் கல்முனை மாநகர சபைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது மாநகர சபையின் நிர்வாக செயற்பாடுகள் குறித்து நேரடியாக கண்டறிந்து கொண்ட பிரதம செயலாளர் அவர்கள், மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இக்கலந்துரையாடலில் மாநகர சபையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் கல்முனை மாநகர சபையின் அண்மைக்கால முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கு பிரதம செயலாளர் பாராட்டும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸி, கணக்காளர் கே.எம்.றியாஸ், நிர்வாகப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன், நிதி உதவியாளர் சசி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
smart