முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலய மாணவன் சாதனை

அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலய மாணவன் முதலிடத்தினைப்பெற்று சாதனை புரிந்துள்ளான்.

அண்மையில் நடைபெற்ற தமிழ்மொழித்தினப்போட்டியின் பாவோதல் நிகழ்ச்சியில் 1ம் பிரிவில் தோற்றிய சு.சதுரிகன் என்ற மாணவனே தேசியமட்டத்தில் முதலிடத்தினைப் பெற்றுள்ளான்.

குறித்த மாணவனை பாராட்டி கௌரவிக்கின்ற நிகழ்ச்சி இன்று(01) புதன்கிழமை இடம்பெற்றது.

வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன், கோட்டக்கல்விப் பணிப்பாளர்களான அ.ஜெயக்குமணன், மூ.உதயகுமாரன் ஆகியோரும் ஆசிரிய ஆலோசகர்களான பு.சதீஸ்குமார், கோகுலதீபன் ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தியதுடன் பெற்றோருக்கும், கற்பித்த ஆசிரியர், வழிநடத்திய அதிபர் ஆகியோருக்கும் பாராட்டினையும் தெரிவித்துக் கொண்டனர்.