இலங்கையின் வரலாற்றில் முதல் முதலாக கிரான் மத்திய கல்லூரியில் மாணவர்  மென்திறன் கழகம்

க.ருத்திரன்

மட்டக்களப்பு கிரான் பழைய மாணவர் அமைப்பு  மட் /ககு/ கிரான் மத்திய கல்லூரியுடன் இணைந்து  நடைமுறைப்படுத்தும் ஆளுமை விருத்திக்கான விசேட செயற்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 24 கழகங்களில் மாணவர் மென்திறன் கழகம் இளம்  கண்டுபிடிப்பாளர் கழகம் மற்றும் ஊடக கழகம் என்பவை கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் திரு.எ .கனகசிங்கம் அவர்களினால் உத்தியோகபூர்வமாக இன்று (31.10.2023) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இலங்கையின் வரலாற்றில் முதல் முதலாக பாடசாலை மட்டத்தில் மாணவர்  மென்திறன் கழகம் கிரான் மத்திய கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வானது அதிபர் திரு. மா. தவராஜா அவர்களின் தலைமையில் பழைய மாணவர் அமைப்பின் தலைவர் திரு. சீ. சுகிதரன் அவர்களின் வரவேற்பு மற்றும்  பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் திரு. பூ. வரதராஜன்  அவர்களின் நன்றியுரையுடன் நடந்தேறியது.

இந் நிகழ்வில் கோ. ப. தெற்கு பிரதேச செயலாளர் திரு. ளு.ராஜ்பாபு, கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட  விரிவுரையாளர் வைத்திய கலாநிதி திரு.க. அருளானந்தம்,பிரதி கல்குடா கல்விப்பணிப்பாளர் திரு.கே.ஜெயவதனன்,  கணபதி பூஜா துரந்தரர் சிவஸ்ரீ.மு.சண்முகம், கிரான் மெதடிஸ்த திருச்சபையின்  அருட்திரு. வே.உதயகுமார், மட் ஃககுஃகிரான் புதுக்கொலனி சிவவித்தியாலய அதிபர் திரு. வு.தமிழ்வாணன்.மட் ஃககுஃ கிரான் விவேகானந்தா வித்தியாலய அதிபர் திருமதி. சுமித்ரா விஜியானந்தம். மற்றும் கிரான் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர்       திரு.எ .கனகசிங்கம். பழைய மாணவர் அமைப்பு கிரான் மத்திய கல்லூரியுடன் இணைந்து கல்லூரியில்  நடைமுறைப்படுத்தும் ஆளுமை விருத்திக்கான விசேட செயற்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 24 மாணவர் மன்றங்கள் தொடர்பான செயற்திட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழகம் இணைந்து செயற்படவுள்ளமையினை உத்தியோகபூர்வமாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்லூரியின் இணைப்பாசிரியர்கள், பழைய மாணவர் அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர்கள், வகுப்பு இணைப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் இவ் வரலாற்று நிகழ்வில்  கலந்து சிறப்பித்திருந்தனர்.