( வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரைக் குளத்தின் கீழ் நெங்செய்கையை மேற்கொள்வோர் இந்நடப்பு ஆண்டு காலபோகத்தை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளபோதும் தேவையான நீர் கிடைக்கக் கூடிய நிலை ஏற்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருக்க வேண்டும். நோய் பீடைகளும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முருங்கன் விவசாய ஆராய்ச்சி உதவிப் பணிப்பாளர் ஸ்ரீ ராஜேஸ் கண்ணா இவ்வாறு தெரிவித்தார்.
மன்னாரில் கட்டுக்கரைக் குளத்தின் கீழ் இந்நடப்பாண்டு காலபோகத்தை மேற்கொள்ள இருக்கும் விவசாயிகள் கூட்டத்தில் முருங்கன் விவசாய ஆராய்ச்சி உதவிப் பணிப்பாளர் ஸ்ரீ ராஜேஸ் கண்ணா மேலும் தெரிவிக்கையில்
மன்னாரில் கட்டுக்கரைக் குளத்தின் கீழ் நெங்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகள் இந்நடப்பு ஆண்டு காலபோகத்தை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளபோதும் தேவையான நீர் கிடைக்கக் கூடிய நிலை ஏற்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருக்க வேண்டும்.
அத்துடன் இதற்காக நாம் நீர்ப்பாசனத்தையே நம்பியும் இருக்க வேண்டும்.
எமது விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் மண் ஆராய்ச்சி செய்வதற்கான வசதிகள் காணப்படுகின்றன.
ஆகவே விவசாயிகள் தங்கள் வயல்களின் மண் பரிசோதனை செய்ய வேண்டுமானால் 295 ரூபா செலவில் உங்கள் பகுதி விவசாய போதனா ஆசிரியர்களுக்கு ஊடாக அனுப்பி வைக்கும் பட்சத்தில் அவற்றை முழுமையாக பரிசோதனை செய்து தரப்படும்
அடுத்து இந்த 2023 – 2024 காலப்போகமானது தண்ணீர் இன்மையால் பயிர் செய்கை கால அட்டவணைகள் மன்னாரில் பின்தள்ளப்பட்டுள்ளதால் இரு நோய் பீடைகளுக்கு உள்ளாகும் நிலையும் காணப்படும்
.
இதில் முக்கியமான நோய் பீடையும் எதிர்பார்க்ப்படுகின்றது. சாதாரண ஒரு நோய் பீடையை பார்க்கிலும் பணிப்பூச்சிகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்புகளும் உண்டு.
இது பெரும்பாலும் ஜனவரி மாதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஆகவே இம்முறை மன்னாரில் பயிர்களுக்கு நோயும் , நோய் பீடையும் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதால் விவசாயிகள் உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள்
உங்கள் பயிர் செய்கையில் பிரச்சனைகள் ஏற்படும்போது 0778888194 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளுகின்றேன் என இவ்வாறு முருங்கன் விவசாய ஆராய்ச்சி உதவிப் பணிப்பாளர் ஸ்ரீ ராஜேஸ் கண்ணா இவ்வாறு தெரிவித்தார்.